Gallery Posts

Office Maps

அசோலாபெட்ஸ்

  • Home
  • அசோலாபெட்ஸ்

அர்ஜுன் அசோலா பெட்ஸ்

அசோலா என்பது தானாகவே தண்ணீரில் வளரக்கூடிய ஒரு தாவர வகை. இது கால்நடை, ஆடு ,கோழி, மீன் போன்றவைகளுக்கு ஒரு சத்துமிக்க துணை தீவனம். அசோலா என்பது ஐந்து முதல் ஆறு இன்ச் வரை உயரம் உள்ள தண்ணீரில் வளரக்கூடிய ஒரு தாவரம்.

இது ஒரு சில இடங்களில் மற்றும் நாடுகளில் பயிருக்கு இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது ஏனென்றால் இதில் அதிக அளவு நைட்ரஜன் மற்றும் கனிம சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இது ஆடு மாடு கோழி தீவனங்களில் கலந்து கொடுக்கும் பொழுது வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தி அதிகமாகிறது. இது வழக்கம் போல உள்ள தீவனங்களில் கலந்து கொடுக்கும் பொழுது தீவனச் செலவு மூன்றில் ஒரு பங்கு குறைவாகிறது. அசோலா விவசாயிகளுக்கு இரண்டு வகைகளிலும் பயன்படுகிறது.

தினந்தோறும் கால்நடைகளுக்கு பொதுவாக மாடுகளுக்கு 1.5 KG முதல் 2 kg வரை கொடுக்கலாம். இதன் மூலம் பால் உற்பத்தி 10 - 12 % கூடுதல் ஆகிறது. நோய் எதிர்ப்பு சக்தியும் கூடுகிறது.

50 கோழிகளுக்கு ஒரு கிலோ அசோலா போதுமானது.

ஒரு கிலோ கோழி தீவனத்தில் எந்த அளவு சத்துக்கள் உள்ளதோ அதே அளவு சத்துக்கள் 100 கிராம் அசோலாவில் இருக்கின்றன.

சினை ஆடுகளுக்கு வெல்லத்தில் கலந்து அசோலா கொடுத்து வந்தால் மிக ஆரோக்கியமான குட்டிகள் என்றும் ஈன்றும் .

கால்நடைகளுக்கு தேவையான தோராயமான அளவுகள்: காளை மாடு/ பசுமாடு /எருமை - நாளொன்றுக்கு1.5 to 2 kgs . ஆடுகள் - 300 - 500 Grams per day.

ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு 300 முதல் 500 கிராம் வரை கொடுக்கலாம் .

பன்றிகளுக்கு 1.5 கிலோ முதல் இரண்டு கிலோ வரை கொடுக்கலாம்.

Layer / broiler லேயர் மற்றும் பிராய்லர் கோழிகளுக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 30 கிராம் வரை கொடுக்கலாம் .

முயல்களுக்கு ஒரு நாளைக்கு 100 கிராம் வரை கொடுக்கலாம்.

8 அடிக்கு 4 அடி உள்ள அசோலா தொட்டியில் ஒரு நாளைக்கு 750 கிராம் லிருந்து ஒரு கிலோ வரை எடுக்கலாம்.

12 பெட் நீளம் x 4 அடி அகலம் x .75 அடி உயரம் உள்ள அசோலா பெட்டில் ஒன்றரை கிலோ அசோலா தினமும் எடுக்கலாம்

அசோலா வளர்ப்பதற்கு கான்கிரீட் / சிமெண்ட்தொட்டிகள் தேவையில்லை . அவை விலை மிக மிக அதிகம்.

அசோலா தொட்டி அமைக்கும் முறை:

எங்களிடம் இரண்டு வகையான அசோலா தொட்டிகள் உள்ளன.

ஒன்று சோப்பு டப்பா மாடல் . இது சற்று விலை அதிகம். மொத்தமான தார்பாலினில் மட்டும்தான் செய்ய முடியும் . . இவற்றை பூமிக்கு பூமிக்கு மேல் தான் போட முடியும். இது பாக்ஸ் டைபில் வரும் . இதே போடுவதற்கு உங்களுக்கு பிவிசி பைப்பு அல்லது மூங்கில்/ சவுக்கு

போன்றவற்றைமுளைக்குச்சிகளாக பயன்படுத்த வேண்டும். அமைப்பதற்கு நேரம் எடுக்கும் மற்றும் அமைப்பதற்கு சற்று கூடுதல் செலவாகும்.

இந்த அசோலா பெட் என்பது நீளம் ,அகலம் ,உயரம் , (அடிகளில்) என்ற அளவுகளில் விற்கப்படுகின்றன உதாரணத்திற்கு 12 அடி நீளம் 4 அடி அகலம் முக்கால் அடி உயரம். இதில் தண்ணீர் வெளியேறுவதற்கு மேற்புறத்தில் ஒரு கொசுவலை மாதிரி ப்ரொவிஷன் இருக்கும் இதன் மூலம் மழை தண்ணீர் வெளியேறிவிடும் .அசோலா வெளியேறாது . இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தண்ணீரை வெளியேற்றி புதிய தண்ணீரை மாற்றுவதற்காகவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீரை வெளியேற்றவும் கீழே ஒரு இன்ச் பைப் ப்ரொவிஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.

சோப்பு டப்பா மாடல் அசோலா பெட் அமைக்கும் முறை:

ஒரு அசோலா சோப் டப்பா மாடலை வாங்கி தரையில் வைத்து சைடில் இருக்கும் லூப்பில் பிவிசி பைப் / மூங்கில் /அல்லது சவுக்கு வைத்து , தரையில் சேர்த்து அடித்து தொட்டி மாறி செய்து கொள்ளவும். ஒரு இன்ச் உயரத்திற்கு களிமண் அல்லது செம்மண் போட்டுக் கொள்ளவும் ஒரு நாளைக்கு முன்னரே 5 முதல் 10 கிலோ சாணம் எடுத்து தண்ணீரில் கலந்து ஊற வைக்கவும். அந்த தண்ணீரை இதன் மீது கலந்து மற்றும் மேலும் ஐந்து இன்ச் உயரத்துக்கு தண்ணீர் நிரப்பி கொள்ளவும். ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை போர் மண் சேர்த்துக் கொள்ளவும். அல்லது 250 கிராம் முதல் 500 கிராம் வரை சூப்பர் பாஸ்பேட் சேர்த்துக் கொள்ளவும்.

நன்றாக கலக்கி விட்டு அசோலா விதையை பரவலாக தூவி விடவும்.

ஜமக்காளம் மாடல் அசோலா வளர்ப்பு பெட் அமைக்கும் முறை :

1. 12 அடி நீளம் x 4 அடி அகலம் x .75 ( முக்கால்) அடி உயரம், உள்ள அசோலா ட்டில் ஒரு நாளைக்கு ஒன்னரை கிலோ (1.5 Kg) அசோலா எடுக்கலாம்.

2. தங்களது மொத்த தேவையை கணக்கிட்டுக் கொள்ளவும்.

3. அதைப் பொறுத்து தங்களது அசோலா பெட்டு குழி அளவை கணக்கிட்டுக் கொள்ளலாம்.

4. குழி அளவை அல்லது கேற்ற மாதிரி 6" உயரத்திற்கு மண்ணை குட்டானாக நான்கு புறமும் உயர்த்தி திட்டு மாதிரி செய்யவும். அசோலா பெட்டை வாங்கி அதை அந்த குழி மேல் பதிக்கவும்.

5. 15" அளவுள்ள பிவிசி பைப்பை உள்ள ஒரு மூலையில் உள்ள இரண்டு பிவிசி பைப்புகளிலும் செருகி வைக்கவும்.

6. ஒரு மூலையில் உள்ள மண்ணை ஒதுக்கிவிட்டு ஒரு பைப்பை தரையில் தரையோடு தரையாக பதிக்கவும் பிறகு மண்ணை மூடி விடவும்.

7. இப்போது 4 இன்ச்க்கு தண்ணீர் விடவும்.

8. ஒரு இன்ச் உயரத்திற்கு செம்மண் அல்லது களிமண் போடவும். 5 முதல் 10 கிலோ (ஒரு நாள் முன்பாக கரைக்கப்பட்ட) சாணித் தண்ணீரை கரைத்து விடவும்.

9. 1 Kg - 2Kg போர் மண் அல்லது 250 கிராம் to 500 கிராம், சூப்பர் பாஸ்பேட் கலக்கவும்.

10. 200 கிராம் - 500 கிராம் அசோலாவை தூவி விடவும்.

11. முழுமையான நிழலும் இருக்கக் கூடாது. அதிகப்படியான சூரிய வெளிச்சம் இருக்கக் கூடாது.

13. நான்கு புறமும், செங்கல் வைத்து நிழல் வலை காற்றில் பறக்காதவாறு பார்த்துக் கொள்ளலாம்.

14. அசோலாவை தண்ணீரில் நன்றாக அலசி காலை கழுவி விட்டு பிறகு கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.

பராமரிக்கும் முறை:

1. இரண்டு நாளைக்கு ஒரு முறை ஒரு குச்சியின் நுனியில் துணி சுற்றி மென்மையாக அசோலா தொட்டியை கலக்கி விடவும்.

2. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முக்கால் அளவு தண்ணீரை வெளியேற்றிவிட்டு புது தண்ணீரை ஊற்றவும். 50 முதல் 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை போடவும்.

3. மூன்று/ நாலு மாதங்களுக்கு ஒரு முறை கீழிருக்கும் மண்ணையும் முழுதாக மாற்றி விடவும் . 50 முதல் 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை சேர்த்துக் கொள்ளவும்.

4. உப்பு தண்ணீர் தவிர்க்கவும்.

5. அசோலா முழு சூரிய வெப்பத்தில் வளராது. நிழலான பகுதி தான் தேவைப்படும் .இல்லாவிட்டால் அசோலா பெட் மேல் நீங்கள் 50% சேட் நெட்/ நிழல் வலை போட்டுக் கொள்ளலாம். வெப்பநிலை 25 முதல் 35 டிகிரி வரை இருப்பது நல்லது. அசோலாவை எடுத்து தினந்தோறும் நன்றாக கழுவி கால்நடை மற்றும் கோழிகளுக்கு கொடுக்கலாம்.

அசோலா வளர்ப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் மேலும் சந்தேகங்கள் இருந்தால் youtube-ல் நிறைய தமிழ் வீடியோக்கள் இருக்கின்றன. அவற்றை பார்த்து நீங்கள் அதிகமான விளக்கங்கள் மற்றும் விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம் .

தொடர்ந்த பராமரிப்பு :

1. ஒரு குச்சி முனையில் துணி சுற்றிக்கொண்டு, அசோலாவை இரண்டு நாளைக்கு ஒரு முறை கலக்கி விடவும்.

2. 15 நாளைக்கு ஒருமுறை முக்கால்வாசி தண்ணீரை வெளியேற்றி, மீண்டும் தன்னிறை நிரப்பி கொள்ளவும்.50 - 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் சேர்த்துக் கொள்ளவும்.

3. 3-4 மாதங்களுக்கு ஒரு முறை கீழே உள்ள அடிமண் முழுவதும் எடுத்துவிட்டு புதிதாக அரை இன்ச் உயரத்திற்கு செம்மண் அல்லது களிமண் முழுவதுமாக தூவி விடவும். 50-100 கிராம் சூப்பர் பாஸ்பேட் சேர்த்துக் கொள்ளவும்.

4. மிக அதிகப்படியான உப்பு தண்ணீரை தவிர்க்கவும்.

அசோலாவின் பயன்கள்:

தீவனச் செலவில் மூன்றில் ஒரு பங்கு நமக்கு மீதமாகும். ஒரு நாளைக்கு ஒரு கால்நடைக்கு ரூபாய் 50/- குறைந்தபட்சம் நமக்கு சேமிப்பாக இருக்கும். அசோலாவில் 25-35% புரோட்டின் சத்துக்கள் உள்ளன. 10-15 மினரல்ஸ் சத்துக்கள் உள்ளன. 7-10% அமினோ ஆசிட்ஸ், இரும்புச்சத்து, விட்டமின் A, விட்டமின்B 12, பீட்டா கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், சத்துக்கள் நிறைந்துள்ளன. இது காளைமாடு, பசு, எருமைமாடு, ஆடு, கோழி,முயல், பன்றிகள் மற்றும் மீன்களுக்கு ஏற்ற சத்துள்ள உணவாகும். மேலும் அர்ஜுன் தார்ப்பாலின் யூடியூப் சேனலில் அசோலா பற்றிய வீடியோக்கள் உள்ளன அவற்றையும் பார்த்து நீங்கள் விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்

அசோலா போடுவதினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:

அசோலா மூன்றில் ஒரு பங்கு தீவனச் செலவை குறைக்கிறது . ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 50 ரூபாய் வரை செலவு குறையும் ஆனால் அதே அளவு ஊட்டச்சத்து கால்நடைகளுக்கு சென்று சேரும்.

அசோலாவில் 25 - 35% புரோட்டின் உள்ளது. 10 - 15 % மினரல்ஸ் உள்ளது. 7 - 10 % அமினோ ஆசிட் உள்ளது. மற்றும் இரும்புச்சத்து விட்டமின் ஏ, விட்டமின் பி 12, பீட்டா கரட்டின், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் சத்துக்களும் நிறைந்துள்ளன.

பசுக்கள் , மாடுகள், ஆடுகள், கோழிகள், பன்றிகள், முயல்கள், மற்றும் மீன்களுக்கு இது மிகவும் விலை குறைந்த சத்து மிக்க துணை தீவனமாகும் .

இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, உலக தரம் வாய்ந்த, அர்ஜுன் தார்பாலினால் , தயாரிக்கப்பட்டதால் உங்களுக்கு இது நீண்ட நாள் உழைக்கும்.

நீங்கள் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஜமக்காளம் மாடல் க்கு 120 GSM, 160 GSM , 200 GSM இவையே போதும்.

ஜமக்காளம் மாடல் அசோலா பெட் அமைக்க கம்பெனியில் உள்ள ஜிஎஸ்எம் மற்றும் கலர்கள்:

120 GSM - 1. புளூ/புளூ. 2. வெள்ளை/கருப்பு.

160 GSM – 1.ஆரஞ்சு/ புளூ . 2,புளூ/புளூ,. 3.வெள்ளை/கருப்பு.

200 GSM – 1.புளூ/புளூ, 2.வெள்ளை/கருப்பு, 3.வெளிர் நீலம்/ பச்சை, 4.கருப்பு/ கருப்பு.

சோப் டப்பா மாடல் அசோலா பெட் அமைக்க கம்பெனியில் உள்ள ஜிஎஸ்எம் மற்றும் கலர்கள்:

250 GSM -1. கருப்பு / கருப்பு, 2.ஆரஞ்சு/இலைப்பச்சை.

340 GSM – 1. ஆரஞ்சு/பச்சை, 2. இலைப்பச்சை/இலைப்பச்சை

அசோலா பேட் ஆர்டர் செய்யும் முறை:

1. முதலில் தங்கள் தேவைக்கேற்ற அசோலா அளவை முடிவு செய்து கொள்ளவும்.

2. அதற்கேற்றவாறு அசோலா பெட் சைஸ் முடிவு செய்து கொள்ளவும்.

3. சோப்பு டப்பா மாடல் அல்லது ஜமக்காளம் மாடல், இதில் எது வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளவும்.

4. அசோலா பெட் இந்தியா முழுவதும் லாரி ஆபீஸ் மூலம் மட்டுமே அனுப்பப்படும். லாரி வாடகை கஸ்டமர் செலுத்த வேண்டும்.

5. நீங்கள் அளவு மற்றும் ஜிஎஸ்எம் முடிவு செய்த பின், எங்களுக்கு ஆர்டர் வாட்ஸ் அப்பில் கொடுக்க வேண்டும்.

6. பிறகு நாங்கள் அதற்கு உண்டான தொகை மற்றும் வங்கி கணக்கு விவரங்களை உங்களுக்கு அனுப்பி வைப்போம்.

7. அதன்பிறகு நீங்கள் பணம் செலுத்தி விட்டு எங்களுக்கு தகவல் சொன்னால், உங்கள் ஊருக்கு நீங்கள் தகவல் சொன்ன லாரி ஆபீஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும் . ஆர்டர் விவரங்கள் மற்றும் உங்கள் முழு விலாசம் மற்றும் எந்த ஊருக்கு ( உங்கள் ஊருக்கோ அல்லது உங்கள் அருகாமையில் இருக்கும் டவுனுக்கோ), லாரி சர்வீஸ் உண்டு, தெரியப்படுத்தினால் அந்த ஊருக்கு சரக்குகள் To Pay அடிப்படையில் அனுப்பி வைக்கப்படும். லாரி வாடகை கொடுத்து சரக்குகளை பெற்றுக் கொள்ளலாம். பில் காப்பியும் லாரி அலுவலகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். ஒரு பில் காபி பண்டல்குள்ளேயும் இருக்கும்.

8. லாரி ஆபீஸ் இல் சரக்குகள் வர தாமதமானால், நீங்கள் லாரி ஆபீசை மட்டும் கேட்கவும் . தாமதமாக கிடைக்கும் சரக்குகளுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.

9. முழு பணம் செலுத்தி நான்கு வேலைநாட்களுக்குள், உங்கள் சரக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

அசோலா வளர்ப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் மேலும் சந்தேகங்கள் இருந்தால் youtube-ல் நிறைய தமிழ் வீடியோக்கள் இருக்கின்றன. அவற்றை பார்த்து நீங்கள் அதிகமான விளக்கங்கள் மற்றும் விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம் .

நன்றி ! வணக்கம்!