Azolla Beds

தமிழ்

அசோலா பற்றிய ஒரு விளக்கம்:

அசோலா என்பது ஒரு தாவரம் போன்றது .

இதில் அதிக அளவு நைட்ரஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது.

இது கால்நடை கோழி மீன் போன்றவைகளுக்கு ஒரு சத்துமிக்க துணை தீவனம்.

இது தண்ணீரில் வளரக்கூடிய ஒரு தாவரம்.

அசோலா என்பது மாடு மற்றும் எருமைகளுக்கு மற்ற தீவனங்களோடு சேர்த்து 1.5 அல்லது 2 கிலோ கொடுக்கலாம் இதன் மூலம் 10 முதல் 12% வரை உங்களுக்கு பால் உற்பத்தி வரும் கூடி வரும்.

ஒரு கிலோ அசோலா 50 கோழிகளுக்கு கொடுக்க முடியும். 100 கிராம் அசோலா ஒரு கிலோ கோழி தீவனத்துக்கு சமம்.

சினை ஆடுகளுக்கு அசோலாவில் வெல்லம் கலந்து கொடுத்தால் நல்ல ஆரோக்கியமான ஆட்டுக்குட்டிகள் பிறக்கும்.

ஆடுகளுக்கு ஒரு நாளைக்கு 300 முதல் 500 கிராம் வரை கொடுக்கலாம்.

பன்றிகளுக்கு 1.5 கிலோ முதல் இரண்டு கிலோ வரை கொடுக்கலாம்.

Layer / broiler லேயர் மற்றும் பிராய்லர் கோழிகளுக்கு ஒரு நாளைக்கு 20 முதல் 30 கிராம் வரை கொடுக்கலாம்.

முயல்களுக்கு ஒரு நாளைக்கு 100 கிராம் வரை கொடுக்கலாம்.

8 அடிக்கு 4 அடி உள்ள அசோலா தொட்டியில் ஒரு நாளைக்கு 750 கிராம் லிருந்து ஒரு கிலோ வரை எடுக்கலாம்.

அசோலா வளர்ப்பதற்கு கான்கிரீட் / சிமெண்ட் தொட்டிகள் தேவையில்லை . அவை விலை மிக மிக அதிகம்.

அசோலா என்பது ஐந்து முதல் ஆறு இன்ச் வரை உயரம் உள்ள தண்ணீரில் வளரக்கூடிய ஒரு தாவரம்.

அசோலா தொட்டி அமைக்கும் முறை:

எங்களிடம் இரண்டு வகையான அசோலா தொட்டிகள் உள்ளன.

ஒன்று சோப்பு டப்பா மாடல் . இது சற்று விலை அதிகம். மொத்தமான தார்பாலினில் மட்டும்தான் செய்ய முடியும் . இவற்றை பூமிக்கு மேல் தான் போட முடியும். இது பாக்ஸ் டைபில் வரும் . இதே போடுவதற்கு உங்களுக்கு பிவிசி பைப்பு அல்லது மூங்கில்/ சவுக்கு போன்றவற்றை முளைக்குச்சிகளாக பயன்படுத்த வேண்டும். அமைப்பதற்கு நேரம் எடுக்கும் மற்றும் அமைப்பதற்கு சற்று கூடுதல் செலவாகும்.

இந்த அசோலா பெட் என்பது நீளம் ,அகலம் ,உயரம் , (அடிகளில்) என்ற அளவுகளில் விற்கப்படுகின்றன உதாரணத்திற்கு 12 அடி நீளம் 4 அடி அகலம் முக்கால் அடி உயரம். இதில் தண்ணீர் வெளியேறுவதற்கு மேற்புறத்தில் ஒரு கொசுவலை மாதிரி ப்ரொவிஷன் இருக்கும் இதன் மூலம் மழை தண்ணீர் வெளியேறிவிடும் .அசோலா வெளியேறாது . இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தண்ணீரை வெளியேற்றி புதிய தண்ணீரை மாற்றுவதற்காகவும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீரை வெளியேற்றவும் கீழே ஒரு இன்ச் பைப் ப்ரொவிஷன் கொடுக்கப்பட்டிருக்கும்.

இது 250 gsm மற்றும் 340 gsm ல். மட்டும் கிடைக்கும்.

அசோலா பெட் அமைக்கும் முறை:

  1. ஒரு அசோலா சோப் டப்பா மாடலை வாங்கி தரையில் வைத்து சைடில் இருக்கும் லூப்பில் பிவிசி பைப் / மூங்கில் /அல்லது சவுக்கு வைத்து , தரையில் சேர்த்து அடித்து தொட்டி மாறி செய்து கொள்ளவும்.
  2. ஒரு இன்ச் உயரத்திற்கு களிமண் அல்லது செம்மண் போட்டுக் கொள்ளவும்.
  3. ஒரு நாளைக்கு முன்னரே 5 முதல் 10 கிலோ சாணம் எடுத்து தண்ணீரில் கலந்து ஊற வைக்கவும்.
  4. அந்த தண்ணீரை இதன் மீது கலந்து மற்றும் மேலும் ஐந்து இன்ச் உயரத்துக்கு தண்ணீர் நிரப்பி கொள்ளவும்.
  5. ஒரு கிலோ முதல் இரண்டு கிலோ வரை போர் மண் சேர்த்துக் கொள்ளவும் அல்லது 250 கிராம் முதல் 500 கிராம் வரை சூப்பர் பாஸ்பேட் சேர்த்துக் கொள்ளவும்.
  6. நன்றாக கலக்கி விட்டு அசோலா விதையை பரவலாக தூவி விடவும்.

அசோலா முழு சூரிய வெப்பத்தில் வளராது. நிழலான பகுதி தான் தேவைப்படும். இல்லாவிட்டால் அசோலா பெட் மேல் நீங்கள் 50% சேட் நெட்/ நிழல் வலை போட்டுக் கொள்ளலாம். வெப்பநிலை 25 முதல் 35 டிகிரி வரை இருப்பது நல்லது.

அசோலாவை எடுத்து தினந்தோறும் நன்றாக கழுவி கால்நடை மற்றும் கோழிகளுக்கு கொடுக்கலாம்.

பராமரிக்கும் முறை:

  1. இரண்டு நாளைக்கு ஒரு முறை ஒரு குச்சியின் நுனியில் துணி சுற்றி மென்மையாக அசோலா தொட்டியை கலக்கி விடவும்.
  2. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முக்கால் அளவு தண்ணீரை வெளியேற்றிவிட்டு புது தண்ணீரை ஊற்றவும். 50 முதல் 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை போடவும்.
  3. மூன்று/ நாலு மாதங்களுக்கு ஒரு முறை கீழிருக்கும் மண்ணையும் முழுதாக மாற்றி விடவும் . 50 முதல் 100 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை சேர்த்துக் கொள்ளவும்.
  4. உப்பு தண்ணீர் தவிர்க்கவும்.
  5. வெயிலில் வைப்பதை தவிர்க்கவும்.

அசோலா போடுவதினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள்:

அசோலா மூன்றில் ஒரு பங்கு தீவனச் செலவை குறைக்கிறது . ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 50 ரூபாய் வரை செலவு குறையும் ஆனால் அதே அளவு ஊட்டச்சத்து கால்நடைகளுக்கு சென்று சேரும்.

அசோலாவில் 25 - 35% புரோட்டின் உள்ளது. 10 - 15 % மினரல்ஸ் உள்ளது. 7 - 10 % அமினோ ஆசிட் உள்ளது. மற்றும் இரும்புச்சத்து விட்டமின் ஏ, விட்டமின் பி 12, பீட்டா கரட்டின், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் சத்துக்களும் நிறைந்துள்ளன.

பசுக்கள் , மாடுகள், ஆடுகள், கோழிகள், பன்றிகள், முயல்கள், மற்றும் மீன்களுக்கு இது மிகவும் விலை குறைந்த சத்து மிக்க துணை தீவனமாகும்.

SOAP BOX மாடல் அசோலா பெட்டில் கீழே ஒரு 15 இன்ச் பைப் (ஒரு இன்ச் விட்டம்) மட்டும் தான் கொடுக்கப்படும்.

ஜமக்காளம் மாடல் அசோலா பெட்டில், இரண்டு 15 இன்ச் பைப் (ஒரு இன்ச் விட்டம்) கொடுக்கப்படும்.

இந்த பிரைஸ் லிஸ்ட் இல்லாத அளவுகள் உங்களுக்கு தேவைப்பட்டால் நீங்கள் கம்பெனியை தொடர்பு கொள்ளலாம்.

இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, உலக தரம் வாய்ந்த, தார்பாலினால் தயாரிக்கப்பட்டதால் உங்களுக்கு இது நீண்ட நாள் உழைக்கும்.

நீங்கள் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஜமக்காளம் மாடல் க்கு 160 gsm , 200 gsm இவையே போதும்.

அசோலா வளர்ப்பு பற்றி உங்களுக்கு ஏதேனும் மேலும் சந்தேகங்கள் இருந்தால் youtube-ல் நிறைய தமிழ் வீடியோக்கள் இருக்கின்றன. அவற்றை பார்த்து நீங்கள் அதிகமான விளக்கங்கள் மற்றும் விவரங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

விலைப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி ! வணக்கம்!

ஜமக்காளம் மாடல் அசோலா வளர்ப்பு பெட் அமைக்கும் முறை

  1. 12 அடி நீளம் x 4 அடி அகலம் x 0.75 (முக்கால்) அடி உயரம் உள்ள அசோலா பெட்டில் ஒரு நாளைக்கு சுமார் 1.5 கிலோ (ஒன்னரை கிலோ) அசோலா எடுக்கலாம்.
  2. தங்களது மொத்த தேவையை முதலில் கணக்கிட்டுக் கொள்ளவும்.
  3. அதனைப் பொறுத்து அசோலா பெட்டிற்கான குழி அளவை நிர்ணயிக்கவும்.
  4. தேவையான அளவிற்கு குழி அமைத்து, நான்கு புறங்களிலும் 6 இன்ச் உயரத்திற்கு மண்ணை குட்டானாக உயர்த்தி திட்டு போல அமைக்கவும்.
  5. அசோலா பெட்டை வாங்கி அந்த குழியின் மேல் சரியாக பதிக்கவும்.
  6. 15 இன்ச் விட்டம் (dia) கொண்ட PVC பைப்பை, ஒரு மூலையில் உள்ள இரண்டு PVC பைப்புகளிலும் செருகி வைக்கவும்.
  7. ஒரு மூலையில் உள்ள மண்ணை அகற்றி, ஒரு பைப்பை தரையோடு தரையாக பதித்து, பின்னர் மண்ணை மூடி விடவும்.
  8. இப்போது பெட்டில் 4 இன்ச் உயரத்திற்கு தண்ணீர் விடவும்.
  9. ஒரு இன்ச் உயரத்திற்கு செம்மண் அல்லது களிமண் போடவும். 5 முதல் 10 கிலோ (ஒரு நாள் முன்பாக கரைத்த) சாணித் தண்ணீரை சேர்க்கவும்.
  10. 1–2 கிலோ போர் மண் அல்லது 250–500 கிராம் சூப்பர் பாஸ்பேட் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  11. 200–500 கிராம் அசோலா விதையை பரப்பி தூவி விடவும்.
  12. முழுமையான நிழலும் இருக்கக் கூடாது; அதிகப்படியான நேரடி சூரிய வெளிச்சமும் இருக்கக் கூடாது.
  13. நான்கு புறங்களிலும் செங்கல் வைத்து, நிழல் வலை காற்றில் பறக்காதவாறு பாதுகாப்பாக அமைக்கவும்

அர்ஜுன் அசோலா பெட்ஸ்

அர்ஜுன் அசோலா வளர்ப்பு தார்பாலின்கள்!

நாங்கள் கடந்த 37 வருடங்களாக, உலகத்தரம் வாய்ந்த, இறக்குமதி செய்யப்பட்ட, HDPE Fabrics கொண்டு கொண்டு, அசோலா வளர்ப்பு பைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். எங்களது வெப்சைட் www.azollabeds.com, பார்த்தால் உங்களுக்கு அசோலா வளர்ப்பு பற்றிய முழு விவரங்கள் கிடைக்கும்.

அசோலா வளர்ப்பு பயிர்களில் இரண்டு மாடல்கள் உள்ளன. ஒன்று தரை மேல் சோப்பு டப்பா, மாதிரியான ஒரு மாடல். இது பெட்டி வடிவில் வரும். இதை அமைப்பதற்கு நீங்கள் நான்கு புறமும் பிவிசி பைப் அல்லது, சவுக்கு குச்சிகள், செருகி, அமைக்க வேண்டும், இது, 250 GSM மற்றும் 340 GSM ரகங்களில் மட்டும் தான் கிடைக்கும். இது விலை அதிகமானதாக இருக்கும்.

இரண்டாவது ரகம், ஜமக்காளம் மாடல்.! இதை வயல்களில் மண்ணை 6" சுற்றிலும் குவித்து வைத்து, அதன் மேல் அமைக்கலாம். இது போர்வை போன்று ஒரே சீட்டாக வரும். இரண்டு மாடல்களிலும், உள்ளிருக்கும் நீரை வெளியேற்றவும், மேலே உள்ள அதிகப்படியான மழை நீர் வெளியேறவும், 3/4 இன்ச், டேங்க் நிப்பிள், மற்றும் ஒரு அடி நீளமுள்ள பிவிசி பைப் இரண்டு, கொடுக்கப்படும்.

இரண்டிலும் ஒரே அளவு தான் அசோலா உற்பத்தியாகும். அதன் விலை குறைவாக இருக்கும். அமைப்பது எளிது. இதற்கு எக்ஸ்ட்ரா பைப் முளைக்குச்சிகள், தேவை இல்லை.

அர்ஜுன் அசோலாபெட்ஸ் கலப்படம் இல்லாத, மூலப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பதாலும், UV Stabilizer அதிகப்படியாக சேர்க்கப்பட்ட காரணத்தினாலும், இவைகள் 3 - 4 வருடங்கள் வரை நன்றாக உழைக்கும்.

விலைப்பட்டியல் - அர்ஜுன் அசோலா படுக்கைகள் (சோப் பாக்ஸ் மாடல்) (GST உட்பட)
L (அடி) B (அடி) H (அடி) தைத்த பின் அளவு (அடி / அங்குலம்) 250 GSM 340 GSM
9418'8" × 3'8" × 9"11851548
9718'8" × 6'8" × 9"16912234
124111'8" × 3'8" × 9"14811842
127111'8" × 6'8" × 9"21242816
154114'8" × 3'8" × 9"17572317
157114'8" × 6'8" × 9"25373377
அசோலா பெட்ஸ் – மண் குவியல் (ஜமக்காளம் மாடல்)
ஆர்டர் செய்யும் அளவு குழியின் அளவு மண்குவியல் உயரம் 120 GSM 160 GSM 200 GSM 250 GSM 340 GSM
9x67x46 inches60773887010371333
12x610x46 inches740914109113121708
14x612x46 inches8281032123714961957
9x97x76 inches8061002120114501895
12x910x76 inches10051266153118632456
14x912x76 inches11371442175121392831
ஆர்டர் செய்யும் முறை:

உங்களுக்கு எந்த மாடல், மற்றும் எந்த ஜிஎஸ்எம், கலர், தேர்ந்தெடுத்த பின் எங்களுடன் தொடர்பு கொண்டால், நாங்கள் உங்களுக்கு கொட்டேஷன் மற்றும் எங்களது பேங்க் அக்கவுண்ட் நம்பர் அனுப்பி வைப்போம். நீங்கள் எங்கள் அக்கவுண்டில் பணம் செலுத்தி, உங்கள் விலாசம், மற்றும் எந்த ஊருக்கு சரக்குகள் புக் செயல்பட வேண்டும் என்று, தெரிவித்தால், அந்த ஊருக்கு லாரி மூலமாகவோ அல்லது கொரியர் சர்வீஸ் மூலமாகவோ சரக்குகளை உங்களுக்கு அனுப்பி வைப்போம். லாரி வாடகை அல்லது கொரியர் பில் தொகை வாடிக்கையாளர் கொடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு எங்களது வெப்சைட் www.azollabeds.com ஐ பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Mfrs: ARJUN AGRI & BIO ENERGY PVT LTD,
47, RAJAJI ROAD, SALEM. 636 007.
Phone: 0427 231 11 11, 231 22 33.
94422 12345, 94861 12345.
Email: info.arjun@gmail.com
Website: www.azollabeds.com
Scroll to Top